திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, விலைவாசியைக் கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார். மேலும், மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார். மேலும், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற அரசு உரிய முயற்சி எடுக்கவில்லை என்றும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு மக்களை பற்றி முதலமைச்சருக்கு கவலையில்லை - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
விலைவாசி உயர்வு, காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசை விமர்சித்து, விவசாயிகள் மற்றும் குடிநீர் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
திருச்சியில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயம் மற்றும் எதிர்கால குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




