தமிழ்நாட்டின் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் நித்யா . இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருடன் 2023-ஆம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் தங்களது உறவு குறித்து பேசலாம் எனக் கூறி நிஷாந்த், நித்யாவை பூபராவில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் சந்தித்துப் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்ததுடன், கல்லால் தாக்கியுள்ளார். இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இரவு நேரத்தில் நித்யாவின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்று பம்ப்ளா அணைப் பகுதியில் கோபம் தீராத நிஷாந்த் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து, எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவான நிஷாந்தை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியைக் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது
கேரளாவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நித்யாவைக் கொலை செய்து, உடலை எரித்த நிஷாந்தை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் காதல் தகராறில் காதலி நித்யாவைக் கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த நிஷாந்தை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளகது.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
