சென்னை கொரட்டூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் உரிமையாளர்கள், வாடகைக் கட்டணத்தை உயர்த்தி வழங்கக் கோரி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பால் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களைப் பயன்படுத்தி பால் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகனங்களுக்கான வாடகைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து, ஒப்பந்தக் காலம் முடிந்து பல மாதங்கள் கடந்தும் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படாததால், வாகனங்களை இயக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகைக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்கினால் மட்டுமே வாகனங்களை இயக்குவோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஆவின் ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் உரிமையாளர்கள், வாடகைக் கட்டணத்தை உயர்த்தி வழங்கக் கோரி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை கொரட்டூர் ஆவின் பால் பண்ணை ஒப்பந்த வாகன உரிமையாளர்கள், வாடகைக் கட்டணத்தை 30% உயர்த்தக் கோரி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
