கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவு, கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கோவை வருகையையொட்டி, விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக ரோடு ஷோ நடைபெற்றது. இதில் வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கோவையில் ரூ.408 கோடி மதிப்பில் நிறைவடைந்த 89 திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதன் மூலம் கோவையின் கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோவையில் பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்
கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




