திருநின்றவூர் இரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக மின்சார ரயில்கள் தாமதமாக வருகிறது. இதனால், தினமும் இரயிலில் பயணம் செய்து பணிக்குச் செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சரியான நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை ஒருவர், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இரயில் பாதையில் திடீரென தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து வந்த போலீசார், அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர் அங்கிருந்து நகராமல் தொடர்ந்து அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் சென்னை நோக்கி மின்சார இரயில் வந்ததால், அவர் தண்டவாளத்திலிருந்து எழுந்து சென்றார். பின்னர், திருவள்ளூர் இரயில்வே போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர். மின்சார இரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார இரயில் தாமதம் - தண்டவாளத்தில் அமர்ந்து பயணி போராட்டம்
திருநின்றவூரில் மின்சார இரயில்கள் தாமதத்தால் கோபமடைந்த நபர், தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருநின்றவூர் இரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதைக் கண்டித்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
