ஆலங்குளம் அருகே மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறந்தையில் இருந்து கல்லத்திக்குளம் செல்லும் சாலையோரத் தோட்டத்தில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் மயிலை வெளியே கக்கிய மலைப்பாம்பு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. இதையடுத்து, பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர். பின்னர், ஆலங்குளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனச்சரகர் முனிரத்னம் தலைமையிலான வனத்துறையினர், மலைப்பாம்பை ஆலங்குளம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
ஆலங்குளம் அருகே மயிலை விழுங்கிய மலைப்பாம்பு
மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




