திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா, கடந்த 4-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், சாலை வளம் செல்லும் பாதையை, மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போலீசார் உடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இது குறித்து போலீசார் அப்போதே வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், தாராபுரத்தில் சீமான் பரப்புரையில் ஈடுபட்டபோது, த.வெ.க தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதாக, கார்த்திகா மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அடிப்படையில், இன்றைய தினம் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திகா கோவையில் குடும்பத்தோடு வசிக்கும் நிலையில், அவரை தாராபுரம் போலீஸார், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
தாராபுரம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 6 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
தாராபுரம் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா, முதலமைச்சர் விஜய், சாலை வலம் செல்லும் பாதையை, மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




