ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்ற தமிழக அரசின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தனது அரசு வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சண்முகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மாவட்ட ஆட்சியரின் வாகனம் சண்முகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சண்முகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சண்முகம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு முகாமில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்த சம்பவம் கோபி மற்றும் வெள்ளாங்கோயில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




