தமிழக முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்தல், வறட்சி நிவாரணம் வழங்குதல் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை நிறுத்த அனுமதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்த விவசாயிகள் தவெக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பிரதான சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியலூர் - ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




