உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி

குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி ஒன்று சாலை வளம் வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி குமரன் காலனியில் குடியிருப்புப் பகுதியில் கரடி சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனியில் நேற்று மாலை கரடி ஒன்று குடியிருப்புப் பகுதியில் நுழைந்து சுற்றித்திரிந்தது. பொதுமக்கள் பயன்படுத்தும் படிக்கட்டுகளில் கரடி எவ்வித அச்சமுமின்றி மெதுவாகச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் செயல்படும் பள்ளிகள் விடும் நேரத்தில் கரடி வந்ததால் வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் அச்சமடைந்தனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இது போன்று அடிக்கடி கோத்தகிரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பகல் நேரத்திலேயே கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குமரன் காலனி உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து பாதுகாப்பான அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி | விசில் மீடியா