கிருஷ்ணகிரி அருகே பண்டப்பள்ளி டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் மற்றும் டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு லாரியில் கொண்டு சென்று கடைகள் முன்பு இறக்கி வைக்கும் பணிக்கு ரூ.10 வழங்க வேண்டும் என்றும், கடைகளுக்குள் கொண்டு சென்று அடுக்கு வைப்பதற்கும் பேட்டி ஒன்றுக்கு ரூ.5 வழங்க வென்றும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓட்டுனர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வழங்குதல், அனைத்து டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படி பி.எப். இஎஸ்ஐ செயல்படுத்துதல் மற்றும் மதுபான பெட்டிகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது அதிர்வில் உடைத்து போகும் மதுபாட்டில்களுக்கான தொகையை தொழிலாளர்களிடம் வற்புறுத்தி வசூலிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் நிறைவேற்றி தர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




