மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. கடந்த 16-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சாந்தியின் மருமகளை சந்திக்க குத்தலாம் தவெக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் வந்துள்ளார். இதனை கண்ட சாந்தி சீனிவாசனை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சீனிவாசன் சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் குத்தாலம் கவலை நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குத்தலாம் தவெக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சீனிவாசனை கைது செய்த குத்தலாம் கவலை நிலைய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பெண்ணை தாக்கிய தவெக நிர்வாகி கைது
குத்தாலம் அருகே தனது மருமகளுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகியைக் கண்டித்த பெண் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி கைது.
பெண் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




