உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் கனமழை, கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பழவேற்காடு கடற்கரைக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

முரசு புயல் வடக்கு ஆந்திரப் பகுதியை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 21 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் தகவல் சேவைகள் மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, கடல் அலைகள் 1.4 மீட்டர் முதல் 2.1 மீட்டர் வரை உயரக்கூடும். இதனால் கடற்கரையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மெரினா மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50