கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0-ன் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று மஞ்சக்குப்பம் நகர அரங்கம் அருகே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், 28.10.2026 முதல் 26.12.2026 வரை நாடு முழுவதும் இப்பிரச்சாரம் நடைபெறுகிறது. இளைஞர்களிடையே புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பது, புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட ஊக்குவிப்பது மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். இப்பேரணியில் நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மஞ்சக்குப்பத்தில் தொடங்கிய பேரணி அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் புகையிலை இல்லா உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம்
கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 400 மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூரில் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் 400 மாணவர்கள் பங்கேற்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




