தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மேலும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் அன்பில் மகேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி போலீசார் அவரைக் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.இதை, தொடர்ந்து, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் தகவல்களைச் சேகரிக்க இரண்டு நாட்கள் காவல் நீட்டிக்க வேண்டும் என போலீசார் கோரினர். இதனை ஏற்ற நீதிபதி, மேலும் இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.வரும் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் போது அன்பில் மகேஷைத் துன்புறுத்தக் கூடாது என்றும், அவரது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
ரூ.100 கோடி முறைகேடு வழக்கு - அன்பில் மகேஷுக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மேலும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.100 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மேலும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின்போது துன்புறுத்தக் கூடாது என்றும், வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




