உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முன்பை விட அதிக நகைகளை அணிந்து யூடியூப்பில் களமிறங்கிய மதுமிதா

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு யூடியூபர் மதுமிதா மீண்டும் அதிக நகைகளுடன் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

118 பவுன் நகைகள் கொள்ளை மற்றும் புகார்கள் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு, மதுமிதா அதிக நகைகளுடன் மீண்டும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முன்பை விட அதிக நகைகளை அணிந்து யூடியூப்பில் களமிறங்கிய மதுமிதா

நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா, வீட்டில் 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்தனர். மதுமிதாவின் ஆடம்பர வீடியோக்களைப் பார்த்தே கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நகைகள் தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு மாதமாக வீடியோக்கள் வெளியிடாமல் இருந்த மதுமிதா, தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.அதில் முன்பைவிட அதிக நகைகளை அணிந்து, தனது குழந்தையின் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடும் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். அவதூறுகளையும் விமர்சனங்களையும் கடந்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புதிய வீடியோக்கள் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50