தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திலீப் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானவர் ஆயுதபூஜை நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 2026-27 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் நிழற் கூடங்கள், நுழைவாயில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆணை ஆயுத பூஜை விழாவில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திலீப் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாமக்கல் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் சுமார் ஐந்து இடங்களில் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி திட்டங்களுக்கான அரசு ஆணையை பூஜை செய்து வழிபட்ட தவெக எம்.எல்.ஏ
நாமக்கல்லில் நடைபெற்ற ஆயுத பூஜை வழிபாட்டில் ரூ. 1.01 கோடி மதிப்பீட்டில் கட்டபடும் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான அரசு ஆணையை வைத்து தவெக எம்.எல்.ஏ திலீப் வழிபாடு செய்தார்.
ரூ. 1.01 கோடி மதிப்பீட்டில் கட்டபடும் நிழல் கூட மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அரசு ஆணையை பூஜையில் வைத்து வழிபாடு செய்த நாமக்கல் எம்.எல்.ஏ திலீப்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




