உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முதுமலை வனப்பகுதியில் குட்டி ஈனும் சமயத்தில் சிரமம் காட்டு யானை உயிரிழப்பு

குட்டியை ஈன முடியாமல் ஏற்பட்ட பிரசவ சிக்கலால் 25 வயது பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி முதுமலை வனப்பகுதியில் குட்டி ஈன முடியாமல் ஏற்பட்ட சிரமத்தால் 25 வயது பெண் காட்டு யானை உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முதுமலை வனப்பகுதியில் குட்டி ஈனும் சமயத்தில் சிரமம் காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பெண் யானை வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மருத்துவர்கள் யானையின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் குட்டியை ஈனும் நேரத்தில் ஏற்பட்ட கடும் சிரமம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, குட்டி ஈன முடியாமல் தாய் யானை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50