உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவலை நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் நிலையில், நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்திய மூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 18-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50