உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பாவூர்சத்திரத்தில் புரோட்டா கடை ஊழியர்கள் மீது தாக்குதல் – இருவர் கைது

பாவூர்சத்திரம் புரோட்டா கடையில் ஊழியர்களைத் தாக்கி பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது தலைமறைவான மற்றொருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் புரோட்டா கடையில் ஊழியர்களைத் தாக்கி, பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் மாரிச்செல்வம், முத்துராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
பாவூர்சத்திரத்தில் புரோட்டா கடை  ஊழியர்கள் மீது தாக்குதல் – இருவர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கே.டி.சி. நகரில் ராஜரத்தினம் என்பவர் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியருக்கும், ஏற்கனவே பணி புரிந்து வந்த வடமாநில ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், புதிதாக பணியில் சேர்ந்த ஊழியருக்கு ஆதரவாக மாரிச்செல்வம், முத்துராஜ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடை ஊழியர்களைத் தாக்கியதுடன், உணவுப் பொருட்கள் மற்றும் கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வம், முத்துராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை தேடி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50