திருநெல்வேலி மாவட்டம் மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன் சாம் பிரபாகர். இவர் முன் விரோதம் காரணமாக மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் பட்டாணி மாரிமுத்து, சுபாஷ், மான் செல்வகுமார், மகாராஜன், லிங்கத்துரை மற்றும் ஒரு இளஞ்சிறார் என 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இளஞ்சிறாரைத் தவிர மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது மகாராஜன் மற்றும் லிங்கத்துரை போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கீழே விழுந்து கைகளில் காயமடைந்தனர். இதனால் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை – 5 பேர் கைது
நெல்லையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் சாலமோன் சாம் பிரபாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் முன்விரோதம் காரணமாக சாலமோன் சாம் பிரபாகர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய இருவர் கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
