திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தவர் குமார். இவர் தமிழக முதலமைச்சரின் பெருந்துறை வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக சென்றிருந்தார். அவருடன் பெண் தலைமை காவலர் உள்ளிட்ட போலீசாரும் சென்றிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணி முடிவடைந்ததை தொடர்ந்து அனைவரும் போலீஸ் வாகனத்தில் திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. குமார், பெண் தலைமை காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் காவலர், வாகனத்திலேயே குமாரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக பெண் காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், திருநெல்வேலி மாநகர அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ. குமாரை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உத்தரவிட்டார்.
பெண் தலைமை காவலருக்கு பாலியல் தொல்லை - சிறப்பு எஸ்.ஐ. கைது
திருநெல்வேலியில் பெண் தலைமை காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு எஸ்.ஐ. குமார் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் பாதுகாப்புப் பணியை முடித்து திரும்பியபோது பெண் தலைமை காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு எஸ்.ஐ. குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
