உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மணல் குவாரி முறைகேடு விவகாரம் - தொழிலதிபர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மணல் குவாரி முறைகேடு புகாரில் தொழிலதிபர் ரத்தினத்துக்கு சொந்தமான திண்டுக்கல் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நான்காவது முறையாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மணல் குவாரி முறைகேடு விவகாரம் - தொழிலதிபர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிகளவில் ரூ.2,000 நோட்டுகள் வைத்திருந்ததாக சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நான்காவது முறையாக இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 20 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50