உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சாலையோரம் நின்ற தார் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இளைஞர் பலி

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தார் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். தந்தை, மகன் படுகாயமடைந்தனர்.

வாழப்பாடி அருகே சாலையோரம் எச்சரிக்கை பலகையின்றி நிறுத்தப்பட்டிருந்த தார் இயந்திரம் மீது அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பிரவீன் என்ற இளைஞர் உயிரிழந்தார். தந்தை, 5 வயது மகன் படுகாயமடைந்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சாலையோரம் நின்ற தார் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து –  இளைஞர் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் மனைப்பிரிவுக்கு சாலை அமைக்கும் பணிக்காக தார் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பஞ்சரான அந்த வாகனம், எவ்வித எச்சரிக்கை பலகையும், ஒளிரும் விளக்குகளும் இன்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு இருட்டில் வந்த பிரவீன், அந்த இயந்திரத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். சில நிமிடங்களிலேயே அதே இயந்திரம் மீது பிரசாத் தனது 5 வயது மகனுடன் வந்த இருசக்கர வாகனமும் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இது குறித்து வாழப்பாடி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாகன ஓட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50