உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

வண்டலூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

வண்டலூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
வண்டலூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - ஜி.எஸ்.டி. சாலை அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் மலைப்பாம்பு, குடியிருப்பு பகுதிக்குள் ஊர்ந்து வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தெருவில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து மீட்டனர். பின்னர் அந்த மலைபாம்பை அங்கிருந்து கொண்டு சென்றனர். பின்னர், குடியிருப்பு பகுதிக்குள் 20 அடி நீள மலைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50