முரசு புயலின் போது நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் ஆந்திர கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மீனவர்கள் மாயமானது குறித்து தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி அளித்தது யார் என்றும், வயர்லெஸ் கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்களைப் பாதுகாப்பாக கரை திரும்பச் செய்திருக்க வேண்டாமா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, மீனவர்களின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.7 லட்சம் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற துயரங்கள் ஏற்படாமல் தடுக்கவும், அனைத்து மீனவர்களுக்கும் ஆயுள் காப்பீடு உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? – உதயநிதி கேள்வி
புயலில் மாயமான 9 காசிமேடு மீனவர்கள் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டிய உதயநிதி, நிவாரணம் உயர்த்தவும் ஆயுள் காப்பீடு வழங்கவும் வலியுறுத்தினார்.
முரசு புயலின் போது நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் ஆந்திர கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




