சென்னை விமான நிலையத்தில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எல்.முருகன் மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எல்.முருகன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார், எனவே கட்சிப் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை வைத்து தற்போதைய தவெக அரசின் ஆட்சி குறித்து கருத்து கூறமுடியாது எனறும், எந்த ஆட்சியாக இருந்தாலும், காவல்துறையினரால் அனைத்து இடங்களுக்கும் சென்று அனைத்து குற்றங்களையும் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்றும் பதிலளித்தார்.
பாஜக மாநிலத் தலைவர்? - சரத்குமார் பதில்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை வைத்து தற்போதைய அரசின் ஆட்சி குறித்து கருத்து கூறமுடியாது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாஜக தலைவராக தாம் நியமிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில்தான் செய்திகள் வருவதாகவும், அதுபற்றி எந்த தகவலும் இல்லை என்றும், சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




