உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் தூத்துக்குடியில் மற்றொரு கொலை நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த வாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளதாகவும், அரிவாள் வெட்டு மற்றும் சிறுமிகள் கடத்தல் போன்ற சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய கனிமொழி, தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவெக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை -தவெக அரசுக்கு கனிமொழி கண | விசில் மீடியா