உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

அரசு பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் – சிபிஎம் சண்முகம் கேள்வி

ரூ.5 கோடி லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சிபிஎம் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார் என்றும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிபிஎம் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
அரசு பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் – சிபிஎம் சண்முகம் கேள்வி

தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைத் தனக்குப் பெற்றுத் தருமாறு கூறி ஒருவர் ரூ.5 கோடி தருவதாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தகுதியற்ற ஒருவருக்கு எந்தத் தொகையைக் கொடுத்தாலும் பதவி வழங்கப்படாது என்றும், தகுதியான புஷ்பவனம் குப்புசாமிக்கு முதலமைச்சர் அப்பதவியை வழங்கியதாகவும் கூறினார். இவ்விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார் என்பதையும், அவர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50