தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, வழக்குகளை விரைந்து விசாரிப்பது மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவல்துறை, சமூக நலத்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அப்போது பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்கள் முதலமைச்சர் விஜய் உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழகத்தில் 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




