திருவள்ளூர் மாவட்டம் வீரபுரம் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிசா மாநிலத் தொழிலாளியை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதை தொடர்ந்து மோரை 400 அடி சாலை அருகே டீக்கடையில் இருந்த ஒருவரை கத்தியால் குத்தி செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், பட்டாபிராம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரைத் தாக்கி ஒரு பவுன் தங்க மோதிரத்தையும் பறித்துள்ளனர். இதையடுத்து கோளப்பஞ்சேரி பகுதியில் ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து நடைபெற்ற குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து போலீசார் தனிப்படைகள் அமைத்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், பாலாஜி, கார்த்திகேயன், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆவடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வழிப்பறி – 4 பேர் கைது
ஆவடியில் ஒரே நாளில் 4 இடங்களில் வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி சுற்றுவட்டாரத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
