சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பூஜாஸ்ரீ. இவர் தனது குழந்தைக்கு தமிழக முதலமைச்சர் விஜயே நேரில் பெயர் சூட்ட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். சிறுவயது முதலே விஜயின் தீவிர ரசிகையாக இருந்த அவர், தனது விருப்பத்தைத் தெரிவித்து ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளார். இதையடுத்து, தாயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், அவரையும் குழந்தையையும் நேரில் சந்தித்துள்ளார். அப்போது குழந்தையை தனது கைகளில் ஏந்திய முதலமைச்சர், குழந்தையின் காதில் விஜய் என மூன்று முறை கூறி பெயர் சூட்டினார். மேலும், குழந்தைக்கு அன்பளிப்பாக தங்க மோதிரத்தையும் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காலையில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையை மாலைக்குள் நிறைவேற்றிய முதலமைச்சரின் இந்தச் செயல் பூஜாஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் தாய் பூஜாஸ்ரீ ஆனந்தக் கண்ணீர் வடித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
குழந்தைக்கு விஜய் என பெயர் சூட்டிய முதலமைச்சர் விஜய் – தங்க மோதிரம் பரிசு
முதலமைச்சர் விஜய், ரசிகையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் குழந்தைக்கு விஜய் என பெயர் சூட்டி தங்க மோதிரம் பரிசளித்தார்.
ஈரோட்டில் ரசிகை பூஜாஸ்ரீயின் விருப்பத்தை ஏற்ற முதலமைச்சர் விஜய், அவரது குழந்தைக்கு விஜய் என பெயர் சூட்டி, தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சியளித்தார். இதனால் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




