தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். இதையடுத்து, சென்னை விமான நிலையம் அருகே பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பா.ஜ.,வினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – வடபழனி இடையே சுமார் 15 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மெட்ரோ ரயில் நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டன. முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு மெட்ரோ ரயிலின் சிறிய மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், போரூரிலிருந்து பூந்தமல்லிக்கு யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று, பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அவருடன் முதலமைச்சர் விஜய்யும் பயணித்தார். அப்போது, திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். மேலும், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் மோடி பயணம்
பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




