சென்னை விருகம்பாக்கம் ஸ்ரீ அய்யப்பா நகரில் 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியின் இரண்டாவது பிரதான சாலையில், கடந்த 60 நாட்களுக்கும் மேலாக குடிநீரில் கருப்பு வண்டல் மண் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், குடிநீரைப் பயன்படுத்த முடியாமல், தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு காய்ச்சல், வாந்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே போன்று தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை, செம்பாக்கம் பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை நிலவுகிறது. இதையடுத்து, ராகவா நகரில் மாட்டுச்சாண நிறத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, குடிநீரின் நிறமாற்றத்திற்கான காரணம் விளக்கப்பட்டு, தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அதே நிறத்தில் தண்ணீர் வந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து, குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, குழாய்களைச் சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குரோம்பேட்டையில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் - பொதுமக்கள் கோரிக்கை
விருகம்பாக்கம், குரோம்பேட்டையில் அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் பொதுமக்கள் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருகம்பாக்கம் குரோம்பேட்டை பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




