நீலகிரி மாவட்டம், குன்னுாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 50 அடி உயர பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும், ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மரங்களுடன் நிலச்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.குன்னுாரில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பள்ளி சாலைக்கு எதிரே புதிதாகக் கட்டப்பட்டிருந்த 50 அடி உயர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஆயிரக்கணக்கான கருங்கற்கள் சரிந்து விழுந்ததால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரரின் கார் சேதமடைந்தது. இதையடுத்து, அந்தச் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இன்கோ சர்வ் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பின் தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்தது. அளக்கரை மற்றும் கேத்தி கெக்கட்டி சாலைகளில் விழுந்த மரங்களையும், மேட்டுப்பாளையம் சாலை காந்திபுரம் அருகே உருண்டு விழுந்த கற்களையும் தீயணைப்புத் துறையினர் அகற்றினர். இதற்கிடையே, குன்னுார் – கல்லாறு ரயில் பாதையில் இரு இடங்களில் பெரிய பாறைகள் மற்றும் மரங்களுடன் நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது கல்லாறு பகுதிக்கு வந்த மலை ரயில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. பின்னர், அந்த ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர் கனமழையால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குன்னுாரில் கனமழை காரணமாக இரயில் பாதையில் நிலச்சரிவு
குன்னுாரில் கனமழையால் 50 அடி தடுப்புச்சுவர் இடிந்து கார் சேதம். ரயில் பாதையில் நிலச்சரிவால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
குன்னுாரில் தொடர்ந்து பெய்த கனமழையால், 50 அடி உயர பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் ராணுவ வீரரின் கார் சேதமடைந்தது. பல்வேறு சாலைகளில் மரங்கள், பாறைகள் விழுந்தன. குன்னுார் – கல்லாறு ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் ரத்து செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




