கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், கழிவுகள் சாலையில் கொட்டிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் லாரியை துரத்திச் சென்று 7 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் மடக்கிப் பிடித்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களும் திரண்டு லாரியை சிறை பிடித்தனர். இந்த தகவலறிந்து வந்த வடசேரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கேரள மாநிலம் தலச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு மீன் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியை அலுவலகத்திற்கு கொண்டு சென்று அபராதம் விதித்தனர்.
அருமனையில் மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
அருமனையில் துர்நாற்றத்துடன் மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரியால் துர்நாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




