உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்

கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் நோக்கில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகள் வழங்கும் நோக்கில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சாவடியில் உள்ள வேளாண்மை மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இந்த விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கூட்டுறவுத்துறை சார்பில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தொகுப்பில் வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இத்தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதால் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை காலத்தில் இத்திட்டம் குடும்பங்களுக்கு உதவியாக இருப்பதாக பயனாளிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரும் பொதுமக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50