கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர், தாராபுரத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மு.க ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து, த.வெ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலினின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. மேலும், த.வெ.க. சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அமைச்சர் நிர்மல்குமார் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், சத்யபாமா குறித்த ஸ்டாலினின் பேச்சும், அதற்கு த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்ப்பும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தருவோம் - அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம்
த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசிய கருத்துக்கு அமைச்சர் நிர்மல்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசிய கருத்துக்கு அமைச்சர் நிர்மல்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும், த.வெ.க. சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




