புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தராத என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், எதிர்க்கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் வலுசேர்க்கவும் இந்தத் தேர்தல் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டாலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் வலுப்பெறும் வகையில் திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு வாக்கு கேட்டு ஸ்டாலின் வீடியோ
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




