இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாக, பிரசாரத்தின்போது முதலமைச்சர் விஜய் மாறி மாறி பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுராந்தகம் தொகுதியில் ஒரே நாளில் முதலமைச்சர் விஜய் 39 இடங்களுக்கு சென்றுள்ளார். எதற்காக 39 இடங்களுக்கு போகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மேலும், முதலமைச்சர் விஜய் தனது பேச்சுகளில் திமுக, தவெக, பாஜக குறித்து மாற்றி மாற்றி குறிப்பிடுவதாகவும், அவரது கருத்துகள் தெளிவாக இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். இதையடுத்து, மக்களிடம் வாக்கு கேட்பதற்காக முதலமைச்சர் விஜய் டிராக்டர் ஓட்டுவது, தேநீர் குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தவெக ஒரு நீர்க்குமிழி போன்றது என நயினார் நாகேந்திரன் கூறினார். அவரது இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் பிரசாரத்தில் மாறி மாறி பேசுகிறார், நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாக, பிரசாரத்தின்போது முதலமைச்சர் விஜய் மாறி மாறி பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




