சென்னை அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில் நகரில், தனியார் மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், பாய்லர் பிரிவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பெண் தொழிலாளர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாய்லரை ஆய்வு செய்து சான்று வழங்கிய பாய்லர் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளன. இதை தொடர்ந்து, குடும்பத்தில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்றும், தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - 5 பேர் பலி
ஸ்ரீசிட்டி மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீசிட்டி தனியார் மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பாய்லர் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




