விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேகர். இவர் புதிதாக கட்டி வரும் தன்னுடைய வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். அப்போது மின்பாதை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் வணிக ஆய்வாளர் மாரீஸ்வரன் ஆகியோர் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து விவசாயி சேகர், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின்படி, லஞ்சப் பணத்தை அதிகாரிகளிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து, அவர்களிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் இணைப்பு வழங்க ரூ.1,500 லஞ்சம் - மின்வாரிய அதிகாரி இருவர் கைது
தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்றதாக மின்வாரியத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்றதாக மின்வாரியத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




