கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மைக்கேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பவுல்ராஜ். இவரது வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடபொன்பரப்பி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து வின்சென்ட் பவுல்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த லிவிங்சன் என்பவருடன் இணைந்து இரவு நேரங்களில் பறவைகள் மற்றும் முயல்களை வேட்டையாடச் செல்வதாக வின்சென்ட் பவுல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லிவிங்சன் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு நாட்டு துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள லிவிங்சனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் பதுக்கியிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் – வாலிபர் கைது
சங்கராபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரைக் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வின்சென்ட் பவுல்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், லிவிங்சனை போலீசார் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




