உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர் பழனிவேல் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் 23 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
சங்ககிரி அருகே லாரி டிரைவர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல். இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் தனஸ்ரீ உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பழனிவேல் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து பழனிவேல் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50