விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் மருத்துவர் சரண்யா. இவர் இன்று அரகண்டநல்லூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சரண்யாவின் உடலை மீட்டனர். பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சக மருத்துவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது குடும்பப் பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்ற பல்வேறு கோணத்தில் குடும்பத்தினர் மற்றும் சக மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் அரசுப் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை
விழுப்புரத்தில் அரசுப் பெண் மருத்துவர் சரண்யா தென்பெண்ணை ஆற்றில் குதித்து உயிரிழந்தார். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் சரண்யா, தென்பெண்ணை ஆற்றில் குதித்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




