உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஒசூரில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர் மயக்கம்

ஒசூரில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 13 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தின்னூரில் உள்ள தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 13 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
ஒசூரில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர் மயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தின்னூர் பகுதியில் உள்ள அம்மன் நகரில் நவீண் என்பவருக்குச் சொந்தமான SRN டிரேடர்ஸ் மாட்டுத்தீவனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது உணவைத் தயாரித்து சாப்பிட்டுள்ளனர். சாதம், சாம்பார் மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொண்டுள்ளனர். உணவைச் சாப்பிட்ட பிறகு தான் அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உணவைச் சாப்பிட்ட 13 தொழிலாளர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக ஒசூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலறிந்த மத்திகிரி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50