உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை அகற்றினால் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம்

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை அகற்றினால் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவோம் என ஈசன் முருகசாமி எச்சரித்தார்.

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை அகற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். கோரிக்கையை மீறி மார்க்கெட்டை அகற்றினால் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என ஈசன் முருகசாமி எச்சரித்தார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை அகற்றினால் ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பல்வேறு திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், விவசாயிகளுக்காக அரசு ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும், பத்தலப்பள்ளி மார்க்கெட்டை அகற்றாமல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்காக அரசு ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைத்துத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை மீறி மார்க்கெட்டை அகற்ற நடவடிக்கை எடுத்தால், ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி சாலையில் காய்கறிகளைக் கொட்டி விற்பனை செய்யும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார் 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50