உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர வாகனத் தணிக்கை – ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

தென்காசி புளியரை சோதனைச் சாவடியில் சட்டவிரோதக் கடத்தலைத் தடுக்க போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ்நாடு – கேரள எல்லையான தென்காசி புளியரையில் கழிவுகள் மற்றும் கனிமவளக் கடத்தலைத் தடுக்க போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன் கேமரா மூலம் எல்லைப் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர வாகனத் தணிக்கை – ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், புளியரை சோதனைச் சாவடி வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கேரளாவுக்கு கழிவுப் பொருட்கள் மற்றும் கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதியில் போலீசார் மேற்கொண்டு வரும் கண்காணிப்புப் பணிகள் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்தக் கண்காணிப்புக் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து, சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50