உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திண்டுக்கல்லில் 3 திருமணங்களை மறைத்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற 4-வது கணவர்

மூன்று திருமணங்கள் நடந்ததை மறைத்ததாகக் கூறி, மனைவி சுவேதாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற 4-வது கணவர் அஜித்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல்லில் ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்ததை மறைத்து தன்னைத் திருமணம் செய்ததாகக் கூறி, மனைவி சுவேதாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற அஜித்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரைக் கைது செய்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திண்டுக்கல்லில் 3 திருமணங்களை மறைத்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற 4-வது கணவர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா. இவர் சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றிய போது, அதே நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டதாகவும், பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லை என்றும் சுவேதா கூறியுள்ளார். இதனை நம்பிய அஜித்குமார், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சுவேதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த அஜித்குமார், அவரது பின்னணி குறித்து விசாரித்துள்ளார். அப்போது சுவேதாவுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்ததும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளியன்று சுவேதாவின் செல்போனைப் பார்த்த அஜித்குமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு எரியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த அஜித்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50