உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு - யூடியூப் பிரபலம் மீனாட்சி கைது

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் யூடியூப் பிரபலம் மீனாட்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் யூடியூப் பிரபலம் மீனாட்சி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், சுரேஷிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு - யூடியூப் பிரபலம் மீனாட்சி கைது

மதுரை நெடுஞ்சாலையில் மூன்று மாடிக் கட்டிடத்துடன் தனிஷ்க் தங்க நகைக்கடை அக்டோபர் 14-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது தளம் காலியாகவும், மூன்றாவது தளத்தில் நகைகளைப் பாதுகாப்பதற்கான லாக்கர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து 15 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர், கட்டிடத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சாரம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக யூடியூப் பிரபலம் மீனாட்சி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50